கூட்டுறவு விற்பனை சங்கத்தை தோற்றுவித்த ஆரிகவுடரின் 52வது நினைவு தினம் அனுசரிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தை நிறுவிய ஆரிகவுடாின் 52வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தை (என்.சி.எம்.எஸ்.,) தோற்றுவித்த ஆரிகவுடரின் 52வது நினைவு தினம் நேற்று ஊட்டியில் உள்ள என்.சி.எம்.எஸ்.,வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. படுகதேச கட்சி நிறுவன தலைவர் மஞ்ைச மோகன் தலைமை வகித்தார். தொடர்ந்து ஆரி கவுடரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் பிரதான காய்கறி பயிர்களாக விளங்கிய உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்து லாபம் பெற்றிடும் வகையில் கடந்த 1935ம் ஆண்டு நீலகிாி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தை ஆரிகவுடர் தோற்றுவித்தார். இதன்மூலம், விவசாயிகள் பல நல்ல பயன்களை பெற்றனர். தற்போது, இச்சங்கம் மூலம் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மானியத்தில் தரமான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகிறது. ஆாி கவுடர் நினைவாக என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் கல்யாண மண்டபம் உள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மிக குறைந்த வாடகைக்கு கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த இங்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், தமிழக – கா்நாடகா எல்லையான கக்கநல்லாவில் அமைந்துள்ள பாலத்திற்கு ஆரி கவுடரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து இந்நிகழ்ச்சியில் நினைவு கூறப்பட்டது. மேலும் ஆரிகவுடருக்கு நீலகிரி மாவட்டத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும். தபால் தலை வெளியிட வேண்டும். தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த கூட்டுறவு நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் ஆரிகவுடர் பெயரில் ேகடயம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆரிகவுடர் பேத்தி தாரா, முன்னாள் இளம் படுகர் சங்க செயலாளர் ரவிக்குமார், எம்சிஎம்எஸ்., மேலாளர் கணேசன், விழாக்குழு செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனா்.

The post கூட்டுறவு விற்பனை சங்கத்தை தோற்றுவித்த ஆரிகவுடரின் 52வது நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: