கும்மிடிப்பூண்டியில் 5 இடங்களில் திமுக இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

 

கும்மிடிப்பூண்டி, மே. 5: கும்மிடிப்பூண்டி தெற்கு, மேற்கு, கிழக்கு ஒன்றியங்களில் திமுக இளைஞரணி சார்பாக தண்ணீர் பந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர்கள் கி.வே. ஆனந்தகுமார், மணிபாலன், பரிமளம் ஆகியோர் வரவேற்றனர். இதில் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் தலைமை தாங்கினார். மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் சி.எச்.சேகர், மாவட்ட நிர்வாகிகள் பகலவன் ரமேஷ் உமா மகேஸ்வரி, கதிரவன், பொதுகுழு உறுப்பினர் குணசேகரன்,

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோகன் பாபு, முன்னாள் மாவட்ட பிரதிநிதி தமிழரசன், கும்மிடிப்பூண்டி இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் புதுவாயில் சுரேஷ், சந்திர மோகன், ராஜ்குமார், குருத்தானமேடு ஜோதி, எருக்குவாய் தியாகராஜன், சூராவளி கண்டிகை ராஜேஷ், முக்கரம்பாக்கம் விஜயகுமார், அமரமேடு முத்து, எளாவூர் லோகேஷ், தேர்வழி கவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ்ராஜ், டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு ஜி.ஆர். கண்டிகை, அமரம்பேடு, மாதர்பாக்கம், எளாவூர் பஜார், பெத்திகுப்பம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பந்தலை திறந்துவைத்து இளநீர், மோர், ஐஸ்கிரீம், வெள்ளரிக்காய், போன்றவற்றை வழங்கினர்.

The post கும்மிடிப்பூண்டியில் 5 இடங்களில் திமுக இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: