கிராமத்தை அசுத்தப்படுத்தியதாக ஆமிர் கான் படக்குழு மீது பரபரப்பு புகார்

மும்பை: ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற ஹாலிவுட் படத்தை இந்தியில் ‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில் தயாரித்து நடித்து வருகிறார், ஆமிர் கான். இப்படத்தில் இடம்பெற வேண்டிய ஒரு போர்க் காட்சியை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டனர். கொரோனா பரவல் காரணமாக, லடாக் பகுதியில் ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடத்திவிட்டு படக்குழுவினர் மும்பை திரும்பினர். அவர்கள் சென்ற பிறகு அந்த பகுதி குப்பைகளால் அசுத்தமாக இருந்திருக்கிறது. அதை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது வைரலானது. இதையடுத்து, சுகாதாரம் மற்றும் சுத்தம் குறித்துப் பேசும் ஆமிர் கான், பொது இடத்தில் இப்படி அலட்சியமாக நடந்துகொள்ளலாமா என்று கடும் விமர்சனம் எழுந்தது. உடனே இதுகுறித்து விளக்கம் அளித்த ஆமிர்கானின் பட நிறுவனம், ‘நாங்கள் படப்பிடிப்புத் தளத்தை சுத்தமாகத்தான் வைத்திருந்தோம். இதற்கென்று தனி குழுவையே நியமித்திருந்தோம்’ என்று கூறியுள்ளது….

The post கிராமத்தை அசுத்தப்படுத்தியதாக ஆமிர் கான் படக்குழு மீது பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: