கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, நவ.25: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர் கன்டோன்மென்ட்- திருவண்ணாமலை ரயில் (வண்டி எண் 06127) இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது. இந்த ரயில், இரவு 9.50 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். வழியில், கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி கூட்ரோடு, போளூர், அகரம்சிப்பந்தி, துரிஞ்சாபுரம் ஆகிய இடங்களில் நிற்கும் இந்த ரயில், வண்டி எண் 06033ஆக சென்னை கடற்கரை – வேலூர் கன்டோன்மென்ட் என இயக்கப்படுவதால், சென்னை கடற்கரையிலேயே திருவண்ணாமலைக்கு டிக்கட் பெற்றுக் கொள்ளலாம்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06128 ஆக திருவண்ணாமலை – வேலூர் கன்டோன்மென்ட் ரயிலாக, நாளையும், மறுநாள் 27ம் தேதியும் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் வந்தடையும். வழியில் துரிஞ்சாபுரம், அகரம்சிப்பந்தி, போளூர், ஆரணி கூட்ரோடு, கண்ணமங்கலம், கணியம்பாடி பகுதிகளில் நின்று செல்லும். இந்த ரயில் வண்டி எண் 06034 ஆக வேலூர் கன்டோன்மென்ட் – சென்னை கடற்கரை என இயக்கப்படுவதால் தீபத்திருவிழா காண வரும் சென்னை பக்தர்கள் திருவண்ணாமலையில் இருந்து ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வண்டி எண் 06129 விழுப்புரம்- திருவண்ணாமலை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (26ம் தேதி), மறுநாள் (27ம் தேதி) இயக்கப்படுகிறது. காலை 9.15 மணிக்கு விழுப்புரம் சந்திப்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 11 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடைகிறது. இந்த ரயில் மதியம் 12.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைகிறது. வழியில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய இடங்களில் நின்று செல்லும். இதே ரயில் வண்டி எண் 06690 ஆக விழுப்புரம்- மயிலாடுதுறை சந்திப்பு ரயிலாக இயக்கப்படுவதால் மயிலாடுதுறையிலேயே தீப விழா காண வரும் பக்தர்கள் திரு கொள்ளலாம்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் வண்டி எண் 06130 ஆக திருவண்ணாமலை- விழுப்புரம் சந்திப்பு இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயிலாக நாளை (26ம் தேதி), மறுநாள் (27ம் தேதி) இயக்கப்படுகிறது. வழியில் தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், ஆயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இதே ரயில் வண்டி எண் 06691 ஆக மயிலாடுதுறை – விழுப்புரம் ரயிலாக இயக்கப்படுவதால் மயிலாடுதுறைக்கு திருவண்ணாமலையிலேயே நேரடியாக டிக்ெகட் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல் வண்டி எண் 06131 விழுப்புரம்- திருவண்ணாமலை ரயில் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது. விழுப்புரத்தில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைகிறது. இந்த ரயிலும் மேற்கண்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதே ரயில் வண்டி எண் 06027 ஆக தாம்பரம்- விழுப்புரம் என இயக்கப்படுவதால் தாம்பரத்தில் இருந்தே திருவண்ணாமலைக்கு நேரடியாக டிக்கட் பெற்றுக் கொள்ளலாம்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06032 ஆக திருவண்ணாமலை – விழுப்புரம் வரை இயக்கப்படும் ரயில் நாளை மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படுகிறது. அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில் மேற்கண்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதிகாலை 5 மணியளவில் விழுப்புரத்தை அடையும்.

இதே ரயில் 06028 ஆக விழுப்புரம்- தாம்பரம் என்று இயக்கப்படுவதால் திருவண்ணாமலையில் இருந்தே நேரடியாக தாம்பரத்துக்கு டிக்ெகட் பெற்றுக் கொள்ளலாம். இந்த மெமு ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
வண்டி எண் 06119 திருப்பாதிரிபுலியூர்- வேலூர் கன்டோன்மென்ட் மெமு ரயில் இன்று 25ம் தேதியும் நாளை 26ம் தேதியும் இயக்கப்படுகிறது. திருப்பாதிரிபுலியூரில் இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 12.40 மணிக்கு வேலூர் வந்தடைகிறது. வழியில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி ரோடு ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இதே ரயில் வண்டி எண் 06889ஆக திருச்சிராப்பள்ளி – திருப்பாதிரிபுலியூர் ரயிலாக இயக்கப்படுவதால் திருச்சியில் இருந்தே வேலூருக்கு நேரடியாக டிக்ெகட் பெற்றுக் கொள்ளலாம். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06120 ஆக வேலூர்- திருப்பாதிரிபுலியூர் இடையே இயக்கப்படும் ரயில் நாளை, நாளை மறுநாள் மேற்கண்ட இடங்களில் நிற்கும் வகையில் இயக்கப்படுகிறது. வேலூர் கன்டோன்மென்டில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் புறப்படும் இந்த ரயில் அதிகாலை 5.40 மணிக்க திருப்பாதிரிபுலியூரை அடைகிறது. இதே ரயில் வண்டி எண் 06890 ஆக திருப்பாதிரிபுலியூர்- திருச்சிராப்பள்ளி ரயிலாக இயக்கப்படுவதால் வேலூரில் இருந்தே திருச்சி செல்பவர்கள் நேரடியாக டிக்ெகட் பெற்றுக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: