காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியில் 1536 அலுவலர்கள் தீவிரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில் 1536 ஆலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகள், வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது.மொத்தம் 156 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில் 3,64,086 பேர் வாக்களிக்கின்றனர். இதற்காக 384 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஒரு குழுவுக்கு 8 பேர் வீதம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 2 பறக்கும் படைகளும், மற்ற இடங்களுக்கு தலா ஒரு பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 872, குன்றத்தூரில் 212, மாங்காட்டில் 176, உத்திரமேரூரில் 108, வாலாஜாபாத்தில் 168 அலுவலர்கள் பணிபுரிகின்றனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள 88 வாக்குச்சாவடிகள் வெப் ஸ்டீரிமிங் எனப்படும் இணைய வழியில் கண்காணிக்கப்படுகின்றன. அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு முன்பு 100 மீட்டர் தூரத்தில் எல்லைக்கோடு வரையப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் காஞ்சிபுரம் காரப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியிலும், குன்றத்தூர், மாங்காடு நகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் குன்றத்தூர் மாதா பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளன.திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் திருக்கழுக்குன்றம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தேசுமுகிப்பேட்டை, கானகோயில் பேட்டை, நால்வர்கோயில்பேட்டை, மங்கலம், பரமசிவன் நகர், எம்என் குப்பம், பெரிய தெரு உள் 30 வாக்குசசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் மங்கலம், பரமசிவன் நகர், நால்வர்கோயில்பேட்டை, கானகோயில்பேட்டை, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 30 வாக்குச்சாவடி மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 30 வாக்குச்சாவடிகளுக்கும் நேற்று மாலை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார், தேர்தல் பொறுப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பினர்….

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியில் 1536 அலுவலர்கள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: