காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

காஞ்சிபுரம்: தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு ஆய்வு குழு டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினா், பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் நகரின் மையத்தில் செல்லும் மஞ்சள் நீர் கால்வாய் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்காவில் சீரமைக்கப்படும் பணிகளை ஆய்வு செய்து, அங்கு நிலவிய குறைகளை உடனடியாக சரிசெய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர். மேலும் பட்டு நெசவாளர்களுக்காக உருவாக்கப்பட்ட பட்டு பூங்காவில் செயல்படும் தனியார் நிறுவனங்களை ஆய்வு செய்து, அவர்களின் தேவைகளை குறிப்பெடுத்து கொண்டனர். இதுகுறித்து ஆய்வு கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வுக்குழுவினர் பார்வையிட உள்ளனர். இதில் எம்எல்ஏக்கள் அருள் (சேலம் மேற்கு), பாலசுப்பிரமணியம் (சேலம் தெற்கு), அன்பழகன் (கும்பகோணம்), டாக்டர் சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), ஈஸ்வரன் (திருச்செங்கோடு), ஷாநவாஸ் (நாகப்பட்டினம்),  ராஜ்குமார் (மயிலாடுதுறை), க.சுந்தர், வக்கீல் எழிலரசன், கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம்  உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, நேற்று மாலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. * ஆதரவற்ற முதியவர் மீட்புகாஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் உள்ள அண்ணா பூங்காவை, மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது, குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்ட முதியவர், நோய்வாய்ப்பட்டு, அங்கு மயங்கி கிடந்தார். இதை பார்த்த குழுவினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவருக்கு உரிய  சிகிச்சை அளித்து, காப்பகதில் சேர்க்கும்படி கலெக்டர் ஆர்த்தி, மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்….

The post காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: