கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கான டோக்கன், விண்ணப்பம் வீடு வீடாக வழங்கல்

 

புதுக்கோட்டை,ஜூலை 21: கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பபடிவம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்று விநியோகம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசின் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான படிவமும் டோக்கனும் வீடு வீடாக விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1002 நியாயவிலை கடைகளில் உள்ள 4லட்சத்து 91 ஆயிரத்து 998 குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன்கள் மற்றும் விண்ணப்பபடிவங்களும் வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 9 மணி முதல் டோக்கன்கள் மற்றும் விண்ணப்பபடிவங்கள் வழங்கும் பணி தொடங்கியது. குறிப்பாக புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் அர்பன் 12க்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அர்பன் ஊழியர்கள் இருவர் வீடு வீடாக சென்று டோக்கன்களையும் விண்ணப்பபடிவமும் வழங்கி வருகின்றனர். மேலும் உடல்நிலை சரியில்லாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஊழியர்கள் அவர்களது வீட்டிற்குள்ளே சென்று பயோமெட்ரிக் மூலம் கைரேகை மற்றும் கையொப்பமும் பெற்றுக்கொண்டு டோக்கன்களையும் விண்ணப்பபடிவத்தையும் வழங்கி எந்த நாளில் வர வேண்டும் என்றும் எடுத்துக் கூறி வருகின்றனர்.

பொன்னமராவதி: பொன்னமராவதி தாலுகாவில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கலைஞர் பெண்கள் உரிமைத்திட்டத்தின் வாயிலாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப மனுக்கள் வரும் 24ம் தேதி முதல் பெறப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று முதல் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான டோக்கன் மற்றும் விண்ணப்ப மனுக்களை வீடு, வீடாக வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி தாலுகாவில் உள்ள அனைத்து ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக இந்த விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கான டோக்கன், விண்ணப்பம் வீடு வீடாக வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: