கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா: பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி

 

கரூர், ஆக. 24: கரூர் பசுபதீஸ்வரா கோயில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஆண்டுதோறும் கரூர் பசுபதீஸ்வரா கோயில் முன்பு எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா சிற ப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பூக்குடலை ஏந்தி சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.இதனை முன்னிட்டு இந்தாண்டுக்கான பூக்குடலை திருவிழா அக்டோபர் 10ம்தேதி அன்று நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, வேண்டிக் கொண்ட பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் அருகே ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, கரூர் பசுபதீஸ்வரா கோயில் அருகே முக்கிய கோயில் விழாக்களில் இந்த பண்டிகையும் ஒன்றாக கருதப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா: பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: