கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவதற்கு 120 படுக்கைகள் உள்ளன. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான கரும்பூஞ்சை கண்டறிதல் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கரும்பூஞ்சை நோய்க்கான காரணங்களை கண்டறிய 13 வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 13 பேர் குழு விரைவில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கை வழங்குவார்கள். 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இரவு 7 மணிக்கு பிறகு மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கொரோனா தடுப்பூசி போடும் பணி தடையின்றி தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 518 பேருக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரும்பூஞ்சை நோயால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டந்தோறும் மருத்துவமனைகளில் கரும்பூஞ்சை சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார்….

The post கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: