காலாண்டு தேர்வு விடுமுறை அக்.6ம் தேதி வரை நீட்டிப்பு


சென்னை: காலாண்டுத் தேர்வு விடுமுறையை 6ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 7ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்வுகள் 28ம் தேதியுடன் முடிவடைகின்றன. இதையடுத்து, காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விடுமுறை நாட்களை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வி இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்க மற்றும் நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் காலாண்டுத் தேர்வின் விடுமுறை நாள்கள் அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதையடுத்து, அக்டோபர் 7ம் தேதி முதல் வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

The post காலாண்டு தேர்வு விடுமுறை அக்.6ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: