திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60% பணிகள் நிறைவேறியிருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்


சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த ரூ10 லட்சம் கோடி முதலீடுகளில் 60 விழுக்காடு பணிகள் நிறைவேறியிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான Guidance TN பணியாளர்களை சந்தித்தேன்.

இவர்களுடைய சிறப்பான பணியினால், நாம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 விழுக்காடு பணிகள் நிறைவேறியிருக்கிறது; மீதமுள்ள 40 விழுக்காடு பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன். 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60% பணிகள் நிறைவேறியிருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: