லேசான மழைக்கும் வாய்ப்பு: அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்


சென்னை: தமிழகத்தில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக சில இடங்களில் வெப்பநிலை அதிகரிப்பது தொடர்கிறது. குறிப்பாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. மதுரையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. ஈரோடு 101 டிகிரி, 8 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது.

இதற்கிடையே, ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. கடலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நேற்று மாலையில் இருந்து இரவு 10 மணி வரையில் பெய்தது. இந்நிலையில், மேற்கு திசையில் இ ருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் அக்்டோபர் 1ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

The post லேசான மழைக்கும் வாய்ப்பு: அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: