கன்னியாகுமரியில் அதிகாரிகள் சோதனை கடைகளில் தடை செய்யப்பட்ட 18.75 கி. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-₹22 ஆயிரம் அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி :  சர்வதேச  சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள்,  வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை  அதிகமாக காணப்படுகிறது.இதேபோல விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை  காலங்களிலும் கூட்டம் அதிகம் காணப்படும். இந்த நேரங்களில் இங்கு  வியாபாரமும் களைகட்டும்.கன்னியாகுமரியில் கடந்த 17ம் தேதி  முதல் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி முக்கடல்  சங்கமம் பகுதியில் பானிபூரி உட்பட பல உணவுகள் தரமற்ற வகையில் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கலெக்டர் அரவிந்த் உத்தரவின்பேரில், உணவு  பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அகஸ்தீஸ்வரம்  வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கசிவம், அலுவலர்கள் குமார பாண்டியன்,  வின்சென்ட் கிளாட்சன், நாகராஜன், பிரவீன் ரகு, ரவி ஆகியோர் 2 குழுக்களாக  பிரிந்து கன்னியாகுமரியில் திடீர் ேசாதனை நடத்தினர்.முக்கடல் சங்கமம்,  சன்னதி தெரு, கடற்கரை சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 49  கடைகளில் நடத்திய சோதனையில், 11 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அந்த கடைகளுக்கு தலா ₹2,000 வீதம் ₹22  ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 18.75 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டன.இதேபோல கடற்கரை சாலையில், வட மாநில வாலிபர் நடத்திய  பானிப்பூரி கடையில் தரமற்ற உணவு இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள்  பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்தனர். மேலும் அந்த நபர்  கன்னியாகுமரியில் உணவு விற்பனை செய்யவும் தடை விதித்தனர்.கடற்கரையில்  இரவு நேரங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளும் தரமற்ற வகையில் உள்ளதாக  சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அதிகாரிகள் இரவு  நேரங்களிலும் இதுபோல சோதனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது….

The post கன்னியாகுமரியில் அதிகாரிகள் சோதனை கடைகளில் தடை செய்யப்பட்ட 18.75 கி. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-₹22 ஆயிரம் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: