ஓய்வூதியர் தின விழா

காஞ்சிபுரம்: தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஓய்வூதியர் தின விழா காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.  மாவட்ட தலைவர் இ.திருவேங்கடம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிச்சைலிங்கம் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர்கள் உத்தமராஜன், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் கே.கங்காதரன் கலந்துகொண்டு,”ஓய்வுபெற்ற பின் எல்லாம் முடிந்துவிட்டது என நீங்கள் இருந்துவிடக்கூடாது. மற்றவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டும்” என்றார். நிகழ்ச்சியில், மாநில பொருளாளர்  எம்.வேலாயுதம், ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க மாநில பொருளாளர் இ.தரணி, மாவட்ட கருவூல அலுவலர் அருண்குமார், கால்நடைத்துறை இணை இயக்குனர் வி.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் வட்ட நிர்வாகி ரவிக்குமார், வாலாஜாபாத் வட்ட நிர்வாகி வின்சென்ட் ராஜ், மாவட்ட பொருளாளர் சவுதாமணி சத்திய சீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்….

The post ஓய்வூதியர் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: