ஒட்டன்சத்திரம, செப். 14: ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில உதவி தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மாணவர்களுக்கான முகாம் நடத்துவது, மாணவர்களின் பாதுகாப்பு, தரமான உணவு வழங்குவதை உறுதி செய்வது, போதை பொருள் விழிப்புணர்வு, மரம் வளர்த்தலின் முக்கியத்துவம், சாலை பாதுகாப்பு, பாலியல் பிரச்னைகளுக்கான எதிரான பிரசாரங்களை நடத்துவது, ஊராட்சி பகுதிகளில் குளங்களை தூர்வாருவது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திட்ட அலுவலர் செல்வராஜ் நன்றி கூறினார்.
The post ஒட்டன்சத்திரத்தில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கூட்டம் appeared first on Dinakaran.