ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த எரும்பி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி  நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. அங்குள்ள தொடக்கப்  பள்ளியில் போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் தேர்தல் நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய  தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சங்கரன் என்பவர் தேர்தல் தேதி  முறையாக அறிவிக்காமல் தேர்தல் நடத்துவதாக தேர்தல் அலுவலர்களுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  இரண்டு மணி நேரம் வாக்குப் பதிவு   தடைப்பட்டது.   போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காலை 9  மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. விவசாயிகள் ஆர்வத்துடன் வாக்குப் பதிவு  செய்தனர். மதியம் 2 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்து வாக்கு  பெட்டிக்கு சீல்வைக்கப்பட்டு ஆர்.கே.பேட்டை தாசில்தார் அலுவலகத்தில்தாசில்தார் தமயந்தி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.   தலைவராக திமுகவை சேர்ந்த  பொன்னுரங்கம் வெற்றி பெற்றார்….

The post ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல் appeared first on Dinakaran.

Related Stories: