சென்னை : தந்தை கடனை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்விக்கடன் வழங்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மாணவி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்விக் கடன் வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மாணவியின் தந்தை ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் மாணவிக்கு கல்விக் கடன் வழங்க மறுத்து வங்கி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.
