ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 6ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு

 

ஊட்டி, ஜூலை 5: ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வரும் 6ம் தேதி இறுதிக் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2023-24 ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும், ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வரும் 6ம் தேதி நடக்கும் இறுதிக் கட்ட கலந்தாய்வில் கலந்துக் கொள்ளலாம்.

இந்த கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவை அசல் மற்றும் நகல் 6 எண்கள் எடுத்து வர வேண்டும். மேலும், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகல் 6 எண்கள் எடுத்து வர வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

The post ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 6ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: