உலக கோப்பை டி20 முதல் அரையிறுதியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

சிட்னி: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. சிட்னி கிரிக்கெட் அரங்கில் நடக்கும் இப்போட்டி பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 ஆடவர் உலக கோப்பை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டங்கள் முடிந்து, முதல் அரையிறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. சிட்னியில் நடக்கும் இப்போட்டியில், முதல் பிரிவில் முதலிடம் பிடித்த  நியூசிலாந்தும், 2வது பிரிவில் 2வது இடம் பிடித்த பாகிஸ்தானும் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, எதிர்பார்த்தது போலவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து வகையிலும் நியூசி. வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். அதே சமயம், சூப்பர் 12 சுற்றில் 2 தோல்விகளை சந்த்தித்து தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு, நெதர்லாந்திடம் தென் ஆப்ரிக்கா அடைந்த அதிர்ச்சி தோல்வி காரணமாக அரையிறுதி ஜாக்பாட் அடித்தது. அந்த அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை என்றாலும், சரியான நேரத்தில் ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதே பாகிஸ்தான் அணியின் பலமாகவும், பலவீனமாகவும் அமைந்துள்ளது. இன்றைய போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளுமே வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.கடைசியாக…பல ஆண்டுகளுக்கு பிறகு, சில வாரங்களுக்கு முன்பு பாக். சென்ற நியூசி. அணி அங்கு 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் பாக். 2-1 என்ற கணக்கில் வென்றது. கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் பாகிஸ்தான் 4-1 என முன்னிலை வகிக்கிறது….

The post உலக கோப்பை டி20 முதல் அரையிறுதியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: