இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஸ்பெயின் தரப்பு தாக்குதலை தீவிரப்படுத்தியது. அதன் பலனாக 39வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் ரோட்ரி கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். இடைவேளை வரை இதே நிலை நீடித்தது.
2வது பாதியில் ஜார்ஜியா கோல் பகுதியை முற்றுகையிட்டு அலை அலையாய் தாக்குதல் நடத்திய ஸ்பெயின் அணிக்கு 51வது நிமிடத்தில் ஃபேபியான், 75வது நிமிடத்தில் வில்லியம்ஸ், 83வது நிமிடத்தில் ஒல்மோ ஆகியோர் அடுத்டுத்து கோலடித்து அசத்தினர். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 3முறை யூரோ சாம்பியனான ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
The post யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் ஸ்பெயின் அணி appeared first on Dinakaran.