பெரில் புயல் காரணமாக விமான நிலையம் மூடல்: பார்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு

பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் பைனலில், தென் ஆப்ரிக்க அணியை இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த சனிக்கிழமை போட்டி நடந்த நிலையில், 3 நாட்கள் ஆகிவிட்ட போதிலும், இந்திய அணி வீரர்கள் இன்னும் தாயகம் திரும்பவில்லை. பார்படாஸில் ஏற்பட்டுள்ள பெரில் (Beryl) என்று சூறாவளி புயல் காரணமாகவே இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புயல் தீவிரமடையும் முன்பே தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். அடுத்து இந்திய அணி வீரர்கள் கிளம்பும் முன்பு சூறாவளி தீவிரமடைந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.

இதனால் இந்திய அணி தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பர்படாஸில் புயல், மழை காரணமாக இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகின்றனர். பார்படாஸில் பலத்த காற்று, மழையுடன் சூறாவளி தாக்கியதால் மின்சாரம், நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே சூறாவளியின் தாக்கம் விரைவில் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை இரவு அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பெரில் புயல் காரணமாக விமான நிலையம் மூடல்: பார்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: