இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள்

 

ஈரோடு, செப். 27: இளைஞர் மேம்பாட்டு மையத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி 2ம் மண்டலத்திற்குட்பட்ட காமராஜ் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் இளைஞர் மேம்பாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. இம்மையத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான நூலகத்துடன் கூடிய படிப்பகம், ஆன்லைன் மூலமாக உயர்கல்வி பயில கணினிகள், பரத நாட்டியம் போன்ற கலாசார நடனம் பயில தனித்தனி வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

3 தளங்கள் கொண்ட இக்கட்டிடத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சென்றுவர வசதியாக லிப்ட் வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இளைஞர் மேம்பாட்டு மையத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக மேஜைகள், நாற்காலிகள், லிப்ட், கணினி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் ரூ.55 லட்சம் செலவில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் appeared first on Dinakaran.

Related Stories: