இன்று துவங்குகிறது பிளஸ்- 2 தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் 19,571 பேர் எழுதுகின்றனர்

திண்டுக்கல், மார்ச் 1: தமிழகத்தில் பிளஸ்- 2 மாணவ, மாணவிகளுக்கு இன்று (மார்ச் 1, வெள்ளிக்கிழமை) பொதுத்தேர்வு துவங்கி வரும் மார்ச் 22ம் தேதி வரை நடக்கிறது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்- 2 தேர்வுகளுக்கு மாவட்டம் முழுவதும் மொத்தம் 87 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதில் பிளஸ்- 2 தேர்வை 217 பள்ளிகளில் படிக்கும் 8 ஆயிரத்து 760 மாணவர்கள், 10 ஆயிரத்து 625 மாணவிகள், தனித்தேர்வகள் 186 பேர் என மொத்தம் 19 ஆயிரத்து 571 பேர் எழுத இருக்கின்றனர்.

தேர்வில் ஆள்மாறாட்டம், காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகள் நடக்காமல் தடுக்க முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் மேற்பார்வையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 143 பறக்கும் படைகள், 87 முதன்மை கண்காணிப்பாளர்கள் குழு, 8 சிறப்பு குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் மாவட்டம் முழுவதும் பிளஸ்- 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக ஒதுக்கப்பட்ட தேர்வு அறைகளில் மாணவர்களின் தேர்வு எண்களை ஒட்டும் பணி, தேர்வுக்குரிய விடைத்தாள்கள், ஹால் டிக்கெட்டுகள் ஆகியவற்றை சரிபார்க்கும் பணியில் ஆசிரியர்கள் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.இதுதவிர தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கவும் அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

The post இன்று துவங்குகிறது பிளஸ்- 2 தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் 19,571 பேர் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: