இடப்பிரச்னையில் பெண் மீது தாக்குதல்

 

அய்யலூர், மே 6: திருப்பூர் மாவட்டம், நெரி பெருக்கல் அருகேயுள்ள வேளாங்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குணவதி (50). இவருக்கும், வடமதுரை அருகேயுள்ள ஜி.குரும்பப்பட்டியில் வசிக்கும் இவரது தம்பி ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்னை இருந்து வந்தது. இந்தநிலையில் குணவதி, ஜி.குரும்பபட்டியல் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த ராமச்சந்திரன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் சேர்ந்து குணவதியை தாக்கி, கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த குணவதி சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து குணவதி அளித்த புகாரின் பேரில் வடமதுரை எஸ்ஐ அங்கமுத்து ராமச்சந்திரன், மகேஸ்வரி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post இடப்பிரச்னையில் பெண் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: