ஆன்லைன் வகுப்பு குரூப்பில் மாணவிகளுக்கு ஆபாச படம் அனுப்பிய வாலிபர் கைது

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆன்லைன் வகுப்புக்காக 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு என தனியாக வாட்ஸ்அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  இந்த வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள ஒரு மாணவி எண்ணிலிருந்து அடிக்கடி ஆபாச பதிவு, ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்தது. இதையடுத்து குரூப் அட்மின் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியதில், அது என்னுடைய வாட்ஸ் அப் எண் இல்லை. ஆனால், என்னுடைய பெயரில் யாரோ தவறான செயலில் ஈடுபட்டு உள்ளனர் என அழுதபடி கூறியுள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம், போலீசில் புகார் செய்தது. விசாரணையில்  இந்த செயலில் ஈடுபட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்த வீராச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் மோகன்குமார் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் தனிப்படையினர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நேற்றுமுன்தினம் சென்று மோகன்குமாரை கைது செய்தனர்….

The post ஆன்லைன் வகுப்பு குரூப்பில் மாணவிகளுக்கு ஆபாச படம் அனுப்பிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: