அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

 

அறந்தாங்கி,மே31: அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (1ம்தேதி) நடக்கிறது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 43 வருங்களாக இயங்கி வரும் பழமையான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25-ம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (1-ம்தேதி) நடக்கிறது. இதில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.

டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், டிப்ளமோ கமர்சியல் பிராக்டிகல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
எனவே இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகள் அனைவரும் கலந்தாய்வில் அசல் சான்றிதழ்கள், ஜெராக்ஸ் நகல் (5 செட்) மற்றும் சேர்க்கை கட்டணம் ரூ.2112 உடன் கலந்தாய்வில் கலந்த கொள்ளுமாறு கல்லூரி முதல்வர்குமார் தெரிவித்துள்ளார்.

The post அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: