அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளலாம்: உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி

வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்துகளை கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் உலகிலேயே அதிகளவு பாதிப்புக்கு உள்ளான அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அந்நாடு, அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது. 
இதனையடுத்து அந்நிறுவனத்தின் தடுப்பூசிகள் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் தினமும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. எனவே கொரேனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் 12 வயது முதல் 15 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசிப் போட்டுக்கொள்ளலாம் என கூறியுள்ளது. 

The post அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளலாம்: உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: