அமமுக பிரமுகர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக மருத்துவ அணி தலைவர் டாக்டர் காளிதாஸ் கொரோனாவுக்கு உயிரிழந்தார். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டை எம்.எம் தியேட்டர் எதிரில் வசித்து வந்தவர் டாக்டர் பி.கே காளிதாஸ். அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில மருத்துவ அணி தலைவரான இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன், கொரோனா தொற்று ஏற்பட்டதால், ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு  சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்தார். இவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இதற்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே நகரில் போட்டியிடும் போது மாற்று வேட்பாளராக இவரது பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது….

The post அமமுக பிரமுகர் கொரோனாவுக்கு உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: