அதிமுக பிரமுகர் குடோனில் இருந்து 10 டன் போலி உரம் பறிமுதல்- சீல் வைப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே அதிமுக பிரமுகர் குடோனில் இருந்து 10 டன் போலி உரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பொள்ளாச்சியை அடுத்த வாழைக்கொம்பு நாகூரை சேர்ந்தவர் தேவராஜ். இவர், குரும்பபாளையத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர்  ராதாகிருஷ்ணன் என்பவர் தோட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்து, உரம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவர் எந்தவித முறையான அனுமதியின்றி போலியாக உரம் தயாரிப்பதாக, வருவாய்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, குரும்பபாளையத்தில் உள்ள அந்த தோட்டத்து குடோனில் தாசில்தார் அரசுகுமார், வேளாண் அதிகாரிகள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த குடோனில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அது போலி உரம் என்றும், உப்பு மற்றும் கோலப்பொடி, சம்பல் உள்ளிட்டவை சேர்த்து போலியாக உரம் தயாரிக்கப்பட்டது என்றும் தெரியவந்தது. இதையடுத்து, தலா 50 கிலோ எடை கொண்ட மூட்டைகள் என மொத்தம் 10 டன் போலி உரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், போலி உரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட குடோனையும் சீல் வைத்தனர். மாதிரிக்காக போலி உரம் எடுத்து செல்லப்பட்டது. இச்சம்பவம் பொள்ளாச்சி அருகே பரபரப்பை ஏற்படத்தியது….

The post அதிமுக பிரமுகர் குடோனில் இருந்து 10 டன் போலி உரம் பறிமுதல்- சீல் வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: