அடுத்தவர் மனைவியுடன் செல்போனில் பேசியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி உதை

சாத்தூர், ஆக. 17: சாத்தூர் அருகே அடுத்தவர் மனைவியுடன் செல்போனில் பேசியதை கண்டித்த வாலிபரை தாக்கிய போலீசார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தூர் அருகே அப்பனேரியை சேர்ந்தவர் விஜய்(24). இவர் வீட்டின் அருகில் கலா என்பவர் வசித்து வருகிறார். கலா விஜய் மனைவியின் மொபைல் போனை வாங்கி தமிழ்நாடு ஆயுத படையில் முதுநிலை காவலராக பணிபுரியும் வைரமுத்து என்பவரிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இந்த விஷயம் விஜய்க்கு தெரிய வரவே, காவலர் வைரமுத்துவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வைரமுத்து, தனது அக்காவின் மகன் காளி என்பவருடன் சேர்ந்து செட்டுடையான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வேலைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த விஜய்யை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த விஜய் அம்மாபட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் காவலர் வைரமுத்து மற்றும் அவரது உறவினர் காளி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அடுத்தவர் மனைவியுடன் செல்போனில் பேசியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி உதை appeared first on Dinakaran.

Related Stories: