சிவகங்கை மாவட்டம், பிரான்மலை அருகிலுள்ள திருத்தலம் கொடுங்குன்றம். இத்தலத்தில் கொடுங்குன்றீசர் திருக்கோயில் உள்ளது. இத்தலத்து கோயிலின் மூலவர் உருவங்கள் கல்யாணக் கோலத்தில் உள்ளன. இக்கோயிலின் மேற்புறம், நடுப்புறம், இடப்புறம் ஆகிய மூன்று அமைப்புகள் சொர்க்கம், அந்தரம், பூமி என்றழைக்கப்படுகின்றன. சொர்க்கத்தில் மங்கை பாகரும், அந்தரத்தில் பைரவரும், பூமியில் கடோர கிரீஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர்.
டி.பூபதிராவ்
Copyright © 2016
All rights reserved to Kal Publications
Design, Development and Maintenance by Web team