×

மோகன்லால் இயக்கி நடித்த பரோஸ்:செப்டம்பர் 12ம் தேதி ரிலீஸ்

கொச்சி: மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘பரோஸ்’. ஃபேண்டஸி கதையுடன் உருவாக்கப்பட்டுள்ள இதில் மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ, குரு சோமசுந்தரம் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்துள்ளார். குழந்தைகளைக் கவரும் வகையில் 3டியில் உருவாக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா படமான இது, வரும் செப்டம்பர் 12ம் தேதி ஓணம் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.

ஜிஜோ புன்னூஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆஃப் டி‘காமா’ஸ் ட்ரெஷர்’ என்ற நாவலின் அடிப்படையில் படம் உருவாகியுள்ளது. வாஸ்கோடகாமாவின் மதிப்பு மிகுந்த பொக்கிஷங்களைப் பாதுகாத்த பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கைச் சம்பவங்கள் மிக ஜனரஞ்சகமாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் ஒரு பகுதிக்கான பின்னணி இசை ஒலிப்பதிவு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் நவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் நடந்துள்ளது.

The post மோகன்லால் இயக்கி நடித்த பரோஸ்:செப்டம்பர் 12ம் தேதி ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mohanlal ,Paros ,Meera Jasmine ,Baz Vega ,Rafael Amarco ,Guru Somasundaram ,Anthony Perumbavoor ,Santhosh Sivan ,Paroes ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்