சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் இணைந்து தயாரிக்க, செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் பைட்’. முக்கிய வேடங்களில் அபர்ணா தாஸ், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முத்துக்குமார், ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ நடிக்கின்றனர்.
காமெடியுடன் கூடிய சர்வைவல் திரில்லராக படம் உருவாகிறது. இதற்கு முன்பு ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சதீஷ் நடித்த ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ என்ற படத்தை இயக்கியிருந்த செல்வின் ராஜ் சேவியர், இப்போது ‘லவ் பைட்’ படத்தை இயக்குகிறார். சுயாதீன இசை அமைப்பாளர் ஃபாக்ஸ்ன் இசை அமைக்க, எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.
