இந்தியில் ஆமிர் கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வெளியான படம், ‘ஏக் தின்’. அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அடுத்து நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகி வரும் ‘ராமாயணா’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இதன் முதல் பாகம் வரும் தீபாவளி அன்று பல்வேறு மொழிகளில் திரைக்கு வருகிறது. தற்போது 2ம் பாகத்துக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர், ராவணன் ரோலில் கன்னட நடிகர் யஷ் நடித்து வருகின்றனர். சுமார் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2 பாகங்களாக தயாராகும் இப்படத்தில் நடிக்க சாய் பல்லவி ரூ.12 கோடியும், ரன்பீர் கபூர் ரூ.150 கோடியும், யஷ் ரூ.100 கோடியும் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி சாய் பல்லவி நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரூ.12 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குவார் என்று சொல்லப்படுகிறது.
