வாரிசுகளால் நடிகை கிரித்தி சனோன்க்கு ஏற்பட்ட இழப்பு

தெலுங்கில் அறிமுகமாகி தற்போது இந்தி படவுலகின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர், கிரித்தி சனோன். கடந்த ஆண்டு தனுஷ் ஜோடியாக ‘தேரே இஷ்க் மே’ என்ற படத்தில் நடித்திருந்த அவர், தற்போது ஷாகித் கபூர் ஜோடியாக ‘காக்டெயில்’ 2ம் பாகத்தில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் ஜூன் மாதம் திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரித்தி சனோன், பாலிவுட்டில் தான் சந்தித்த சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் பாலிவுட்டில் நுழைந்ததால், ஆரம்பத்தில் புதுப்பட வாய்ப்புகளுக்காக கடுமையாக போராடினேன். பல படங்களில் நடிப்பதற்கு தேர்வாகி, பிறகு கடைசி நேரத்தில் அந்த பட வாய்ப்பு நட்சத்திர வாரிசுகளுக்கு கைமாறி சென்றன. ‘மிமி’ என்ற படம் வெற்றிபெறும் வரை எந்த வாய்ப்பும் எனக்கு எளிதாக கிடைக்கவில்லை. ஒவ்வொரு வாய்ப்பையும் நான் போராடியே பெற்றேன். சினிமா குடும்பத்தில் இருந்து வராததால், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற பயத்துடனேயே பயணிக்க வேண்டியிருந்தது. எனது சில படங்கள் தோல்வி அடைந்தபோது மிகவும் சோர்ந்து போனாலும், அந்த தோல்விகள் அடுத்தடுத்து எத்தகைய கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தெளிவை எனக்கு கொடுத்தது’ என்றார்.

Related Stories: