சூர்யாவை பிரபாஸுடன் ஒப்பிட்ட கார்த்தி

நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, சுவாசிகா, ஷிவதா நாயர், இந்திரன்ஸ், யோகி பாபு நடித்துள்ள படம், ‘கருப்பு’. இதன் தெலுங்கு பதிப்பு `வீரபத்ருடு’. இப்படத்துக்கான நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, ‘முதலில் எனது அண்ணன் சூர்யா கத்தி, சுருட்டுடன் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை பார்த்தேன். அதுவே எனக்கு பிரமிப்பாக இருந்தது. இது மாஸ் மசாலாவுடன் கூடிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடும்ப படம் என்று சொல்லலாம். நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

சாய் அப்யங்கரின் இசை ரொம்ப எனர்ஜியாக இருக்கும். ‘God-u Mode-u’ என்ற பாட்டே அதிர்ந்தது. Beast Mode-u தெரியும். God-u Mode-u என்பது புதிய பதம். பிறகு வந்த சில பாடல்களும் அருமையாக இருந்தது. அண்ணன் நடித்த சில காட்சிகளை பார்த்தேன். இதெல்லாம் அவரால் மட்டுமே செய்ய முடியும். உண்மையில் God-u Mode-u தான். செம மாஸ். அவரை பற்றி சிந்தித்தால் ‘பாகுபலி’ படம்தான் நினைவுக்கு வருகிறது. சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு பிரபாஸ் செல்வார் அல்லவா? அப்படி எவ்வளவு சுமை கொடுத்தாலும் அண்ணனால் தாங்கிக்கொள்ள முடியும். தியேட்டரில் பார்த்து ரசித்து கொண்டாட வேண்டிய படம் இது’ என்றார்.

Related Stories: