ஓடிடியில் முதலிடம் பெற்ற மிருணாள் தாகூர்

மும்பை: ஷேனெயில் தியோ இயக்கத்தில் அதிவி சேஷ், மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘டகோயிட்’. சுப்ரியா யர்லகடா தயாரிக்க, பீம்ஸ் சிசிரோலியோ இசை அமைத்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இப்படம், பான் இந்தியா படமாக பல்வேறு மொழிகளில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய்க்கு மேல் கடந்துள்ளது. இப்படம் ஓடிடியில் கடந்த 8ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் தளத்தில் ஒளிபரப்பானது. அதிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று, இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. திரையரங்கை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றதால், மிருணாள் தாகூர் மற்றும் படக்குழுவினர் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: