தோல்வியை சந்தித்தால் 1 மணி நேரம் அழுவேன்: ஸ்ரீலீலா சொல்கிறார்

சென்னை: தோல்வியை சந்தித்தால் ஒரு மணி நேரம் மட்டும் அழுவேன் என்றார் ஸ்ரீலீலா.

சென்னைஸ் அமிர்தா கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய ஸ்ரீலீலா, அவர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்:
நயன்தாராவுடன் ஒப்பிட்டு என்னை லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லாதீர்கள். நயன்தாரா அக்கா எனக்கு பிடித்த நடிகை. அவரது இடத்துக்கு செல்ல நான் மேலும் உழைக்க வேண்டும். டாக்டருக்கு படித்துவிட்டு, பட்டம் வாங்கியபோது, மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இன்டன்ஷிப் செய்து வருகிறேன். எதிர்காலத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க விரும்புகிறேன். இப்போதைக்கு சினிமாவில் கவனம் செலுத்துவேன். நடிப்பா, நடனமா என கேட்டால் எனக்கு பிடித்தது நடிப்புதான். அதற்கு பிறகே நடனத்துக்கு முக்கியத்துவம் தருவேன்.

படித்துக் கொண்டே நடிப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஆனால் உங்களைப் போல் மாணவ, மாணவிகள் படித்துக்கொண்டே வேலை பார்ப்பது எனக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறது. தோல்வி ஏற்பட்டால், அதிக நேரம் கவலையாக இருக்க வேண்டாம். நானும் ஒரு மணி நேரம் தனிமையில் அழுவேன். பிறகு அதிலிருந்து விடபட்டு வந்துவிடுவேன் என்றார்.

Related Stories: