இன்ஸ்டா வீடியோ கால் மூலம் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு மகளிர் அணியில் பதவி வேண்டும் என்றால் என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் தவெக மாவட்ட செயலாளர் மிரட்டுகிறார்: இளம் பெண் புகார்

சென்னை: தவெக மகளிர் அணியில் பொறுப்பு வேண்டும் என்றால் என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கட்சியில் சேர்ந்த இளம் பெண்ணை இன்ஸ்டா வீடியோ கால் மூலம் அழைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டி வரும் ராணிப்பேட்டை தவெக மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகன் மீது பாதிக்கப்பட்ட பெண் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் கடந்த 22ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் மாசாப்பேட்டையை சேர்ந்த 34 வயது இளம் பெண் ஒருவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் கட்சியில் என்னை இணைத்து கொள்வதற்காக, அக்கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகன் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது எனக்கு கட்சியின் மகளிர் அணி பொறுப்பு வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர், கண்டிப்பாக நம் கட்சி பெண்களுக்கான கட்சி, உங்களுக்கு முன்னுரிமை உண்டு அப்படி என்று கூறினார். ஒரு சில நாட்கள் கழித்து நான் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஏதேனும் விழாக்கள் செய்யும் போது என்னையும் அழையுங்கள் நான் கலந்து கொள்கிறேன் என்று கூறினேன். பிறகு அவர், என்னுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் எனக்கு மெசேஜ் செய்ய ஆரம்பித்தார்.

நானும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பேசுகின்ற வார்த்தைகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பதில் அளித்து கொண்டு இருந்தேன். அப்போது அவர், கட்சியில் பதவி என்பது அவ்வளவு சுலபமாக கொடுத்து விட முடியாது. நான் உனக்காக செய்கிறேன் என்று என்னிடம் பேச ஆரம்பித்தார். நான் ‘உனக்கு கட்சியில் பதவி கொடுத்தால் நீ எனக்கு என்ன செய்வாய் என்று கேட்டார்’. நான் என்ன கொடுப்பது என்னிடம் எதுவும் இல்லையே என்று கூறினேன். அதற்கு அவர் ஒரு சில ஆசை வார்த்தைகள் கூறி எனக்கு வீடியோ கால் செய் அது போதும் அப்படி என்று கூறினார். அதன் பிறகு இன்ஸ்டா வீடியோ கால் செய்து, ‘அழகாக இருக்கிறாயே உனக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று ஒரு சில வார்த்தைகள் பேசி தொடங்கினார். அப்போது என்னுடைய மார்பகத்தை காமி என்று கூறினார். நான் அதெல்லாம் தவறு என்று கூறி கால் கட் செய்துவிட்டேன். பிறகு மீண்டும் என்னை தொடர்பு கொண்டு, ‘உனக்கு கட்சியில் பதவி வேண்டுமா’ என்று கேட்டார். அதற்கு நான் ஆம் என்று கூறினேன். அதற்கு அவர், இது போல் சின்ன விஷயங்களாவது எனக்காக நீ செய்து கொடுத்தால் நான் உனக்கு கட்சியில் பதவி தருகிறேன். நானும் சரி வீடியோ கால் தானே அப்படி என்று காண்பித்து விட்டேன். அதை உடனடியாக அவர் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து கொண்டு அதை வைத்து என் முழு உடலையும் காமி என்று என்னை மிரட்டினார்.

அதையும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து வைத்து கொண்டு பயப்படாதே நான் இதை எதுவும் செய்ய மாட்டேன். என்று சில ஆசை வார்த்தைகள் கூறி உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேள் என்று கூறினார்.
என்னுடைய பழைய வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதற்கு ஏதாவது நடிவடிக்கை எடுக்க கோரி நீங்கள் உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் கண்டிப்பாக அதை வழக்கறிஞருக்கு அனுப்பி நான் பார்த்து சொல்கிறேன் என்ற கூறி என்னிடம் கொஞ்சம் பணம் வாங்கி இருந்தார். பிறகு நாட்கள் செல்ல செல்ல என்னை மீண்டும் மிரட்ட தொடங்கினார். உன் வீடியோவை நான் வெளியிட்டு விடுவேன். நான் சொல்கின்ற இடத்திற்கு வந்து சேர் என்று மிரட்டினார். நான் அவருடன் எந்த இடத்திற்கும் செல்லவில்லை. ஒரு நாள் எனக்கு மாதவிடாய் ஆகிய நேரத்தில் எனக்கு கால் செய்து நீ இப்பொழுது சென்னைக்கு வர வேண்டும் என்று அழைத்தார். இல்லை நான் மாதவிடாயாக உள்ளேன் என்று நான் கூறினேன். அதற்கு எங்கே வீடியோ கால் பண்ணி காமி என்று கேட்டு அதனையும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து வை்து என்னை மிரட்டுகிறார். இதை எல்லாம் வெளியிட்டால் என்ன ஆகும் என்று உனக்கு நன்றாகவே தெரியும் அடுத்த மூன்று நாட்கள் கழித்து நான் கூறும் இடத்திற்கு நீ வந்து சேர வேண்டும் என்று மிரட்டினார்.

நான் அச்சத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தேன் பிறகு எனக்கு ஒரு யோசனை வந்தது. ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிரா விடம் இதை கூறினால் அவர் ஏதேனும் வழி சொல்வார் என்று அவரை சந்திக்க தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரிடம் நேரில் சென்றேன். எம்எல்ஏ தாஹிராவிடம் அனைத்தையும் கூறினேன். அவர் விஜய்மோகனை நேரில் அழைத்து செல்போனில் உள்ள அனைத்தையும் டெலிட் செய்துவிட்டு அத்துடன் இந்த பிரச்னை முடித்து கொள்ளுமாறு கூறினார். பிறகு அவர் நான் எல்லாத்தையும் டெலிட் செய்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் என்னை தொடர்பு கொண்டு நான் வீடியோ எதையும் டெலிட் செய்யவில்லை. எல்லாம் என்னிடம் உள்ளது. உன்னை சும்மாவிட மாட்டேன் என்று மிரட்டி நான் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் என ஆபாசமாக பேசினார். அவரது நண்பர் ஜான்பிரிட்டோ என்பவர் என்னை தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்.

எனவே நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் தவெக மாவட்ட செயலாளர் விஜய்மோகனை கைது செய்து அவருடைய செல்போனில் இருக்கும் என்னுடைய ஆபாச வீடியோக்களை டெலிட் செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.அந்த புகாரின் படி ஆற்காடு நகர போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 34 வயது இளம் பெண்ணுக்கு தவெகவில் மகளிர் அணியில் பதவி தருவதாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகன் இன்ஸ்டா வீடியோ கால் மூலம் பேசி நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவு செய்து மிரட்டி தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்தது உறுதியானது. அதைதொடர்ந்து தவெக மாவட்ட செயலாளர் விஜய்மோகன் மீது பிஎஸ்எஸ் சட்டப்பிரிவு 75, 76, 77, 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட செயலாளர் விஜய்மோகன் புகார் அளித்த பெண்ணை தனது ஆதரவாளர்களை வைத்து மிரட்டி வருவதாகவும், புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தும், இதுநாள் வரை விஜய்மோகனை கைது செய்யவில்லை. எனவே எனது ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ வைத்துள்ள தவெக மாவட்ட செயலாளரை கைது செய்ய ஆற்காடு நகர போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் நேற்று மீண்டும் கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

Related Stories: