தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரிடம் நகை பறித்த சம்பவத்தால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆசிரியை சாந்தியிடம் 16 சவரன் நகையை பறித்துக் கொண்டு அருகே உள்ள வாழைத்தோட்டத்துக்குள் மர்மநபர் புகுந்தார். நகை பறிப்பில் ஈடுபட்ட திருடனை போலீசார் டிரோன் மூலம் தேடி வருகின்றனர்.
