ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நேற்று அமைச்சர் வன்னி அரசு நிருபர்களிடம் கூறியதாவது: தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்கும் போக்கினை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழக முதல்வர் அதனை ரத்து செய்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் திருமாவளவன் தூய்மை பணியாளர்களுக்காக கொடுத்த அறிக்கையின் காரணமாகவே தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா திருமாவளவனுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தார்.
திருமாவளவன் கொடுத்த ஆக்கப்பூர்வமான அறிக்கையை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டு இருப்பதால் தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா விமர்சனம் புறக்கணிக்கப்படும். பாமக தலைவர் அன்புமணி சமூக நீதி சாதிவாரி கணக்கெடுப்பு கொள்கையை முன்வைத்து முதலமைச்சரை சந்தித்து வருகிறார். அதில் எந்த தவறும் கிடையாது. விசி கட்சியின் கொள்கையும் கோட்பாடும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தான். ஆகவே அன்புமணி முதலமைச்சரை சந்திப்பதும் நெருக்கமாக இருப்பதும் எந்த ஒரு தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
