அனைத்து பஸ்களிலும் மகளிர் இலவச பயணம் எப்போது? அமைச்சர் நழுவல்

ஓமலூர்: சென்னையில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று சேலம் வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: போக்குவரத்துத் துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான நிதியை எந்தெந்த வழிகளில் எல்லாம் கொண்டு வர முடியுமோ, அதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

துறைக்கு தேவையான வருவாயை பெருக்குவதே முக்கிய நோக்கம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, அனைத்து பஸ்களிலும் மகளிர் இலவச பயண திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், போக்குவரத்து துறை சார்ந்த அனைத்து புதிய திட்டங்களும், அறிவிப்புகளும் மிக விரைவில் முதலமைச்சரின் ஒப்புதலோடு படிப்படியா வெளியிடப்படும் என்றார்.

Related Stories: