சென்னை: அதிமுக மகளிர் அணி கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில், வருகிற 1ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்தும், கழக வளர்ச்சி பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும், மகளிர் அணி மாநில நிர்வாகிகள்;
மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களை சேர்ந்த, மாவட்ட இணைச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர், தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் செய்தி தொடர்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகின்ற 1ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். கூட்டத்தில் மூத்த தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். ஆகவே, மேற்கண்ட பொறுப்புகளில் பணியாற்றி வரும் அனைத்து மகளிர் நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
