புதுடெல்லி: பாஸ்போர்ட் ஒருபோதும் குடியுரிமைக்கான சான்றாக இருந்ததில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் பாஸ்போர்ட் என்பது இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒருவரது குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக பாஸ்போர்ட்டை கருத முடியாது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. அப்படியானால் குடியுரிமைக்கான உண்மையான ஆதாரம் எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில், பாஸ்போர்ட் ஒரு பயண ஆவணம், குடியுரிமைக்கான சான்று அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. 1967 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டத்தின்படி, குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படலாம். கடந்த 12 ஆண்டுகளில்கூட ஒன்றிய அரசு அதுபற்றி புதிதாக முடிவு செய்யவில்லை.
பாஸ்போர்ட் ஒருபோதும் குடியுரிமைக்கான சான்றாக இருந்ததில்லை,” என்று தெரிவித்தன. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், இன்று இந்தியக் குடியுரிமைக்கான ஒரே ஆதாரம், இந்துவாகவும் பாஜ வாக்காளராகவும் இருப்பதுதான் என்று தோன்றுகிறது. வேறு எதுவும் எடுபடாது, என்று குறிப்பிட்டுள்ளார்.
கபில் சிபல் எம்பி, அப்படியானால், குடியுரிமைக்கான ஆதாரம் எந்த ஆவணம்? வாக்குசாவடி அதிகாரி என் குடியுரிமையைச் சந்தேகிக்கலாம். என் வாக்கை நான் இழக்க நேரிடும். இதன் விளைவாக, பாஜ தேர்தலில் வெற்றி பெறுகிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
