புதுடெல்லி: சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், பல்வேறு தொழில்துறையினரும் தங்களின் சொந்த தேவைக்கேற்ப பிரத்யேக சரக்கு ரயில் பெட்டிகளை வடிவமைத்துக் கொள்ள ஒன்றிய ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்க உள்ளது.
சிமெண்ட், இரும்பு போன்ற பொருட்களின் தன்மைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ரயில் பெட்டிகளை வடிவமைப்பதன் மூலம் சரக்குகளை ஏற்றுவது மற்றும் இறக்குவதை எளிதாக்கும். இதற்கான புதிய கொள்கையை 15 நாட்களுக்குள் இறுதி செய்ய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
