புதுடெல்லி: மாநிலங்களவையில் காலியாக இருந்த இடங்களை நிரப்புவதற்காக கடந்த 18ம் தேதிக்குள் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், குஜராத், ஒடிசா, ஜார்க்கண்ட், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் காலியாக இருந்த 1 இடத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தமிழகத்தின் பிரவீன் சக்ரவர்த்தி, ஆந்திராவின் சனா சதீஷ் பாபு, விஜய் சிந்தகாயலா, பாஷ்யம் ராமகிருஷ்ணா, லிங்கம்மனேனி ரமேஷ், உள்ளிட்ட 10 பேர் நேற்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
