பிரதமர் மோடியை தொடர்ந்து ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு: விரைவில் அமைச்சரவை மாற்றம்?

புதுடெல்லி: ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சராக இருந்த கேரளாவின் ஜார்ஜ் குரியன் தனது மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் விலகினார். இவருக்கு மாநிலங்களவை தேர்தலில் பாஜ சீட் தரவில்லை. இதனால் விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை ஜனாதிபதி அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த 23ம் தேதி பத்ம விருதுகள் விழாவைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் ஜனாதிபதி முர்முவை சந்தித்துள்ளார். எனவே அடுத்த ஓரிரு நாட்களில் ஒன்றிய அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: