ராஜ்பிப்லா: குஜராத்தில் வனத்துறை அதிகாரிகளை தாக்கிய உள்ளிட்ட வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சைதர் வசவா மற்றும் அவரது மனைவி உட்பட 9 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் டெடியாபாடா பழங்குடியினர் தனித் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடியினத் தலைவர் வசவா. கடந்த 2023ம் ஆண்டு அரசுக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை வனத்துறை அதிகாரிகள் அகற்றினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
அதிகாரிகள் டெடியாபாடா நகரில் உள்ள வசவாவின் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது வசவா, அவரது மனைவி மற்றும் அங்கிருந்தவர்கள் வனத்துறை அதிகாரிகளை மிரட்டியதுடன் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாக தெரிகின்றது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உள்ளூர் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், வசவா அவரது மனைவி சகுந்தலா மற்றும் பிறரை நீதிபதி குற்றவாளிகள் என அறிவித்தார். மேலும் இவர்கள் 9 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
