திருச்சி, ஜூன்8: திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜூன் 6ம் தேதி கண்டோன்மென்ட் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கல்லுக்குழி ரயில்வே ஜங்ஷன் அருகே குட்கா விற்ற கிராப்பட்டியை சேர்ந்த ராஜசேகர்( 42) என்பவரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று ரங்கம் அழகிரிபுரம் டாஸ்மாக் கடையின் அருகே குட்கா விற்ற ரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரை ரங்கம் போலீசார் கைது செய்தனர். இவா்களிடமிருந்து 34 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.
