ஆப்கானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி

தர்மசாலா: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது. மழை காரணமாக ஆட்டம் சுமார் 4 மணிநேரம் தாமதமாக துவங்கியது. இதையடுத்து 25 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தவண்ணம் இருந்தது.

ஒருமுனையில் விக்கெட் வீழ்ந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் குர்பாஷ் சதம் விளாசினார். இவர் 102 ரன்னில் நிதிஷ்குமார் ரெட்டி பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனார். அடுத்ததாக கேப்டன் ஷாகிதி 27 ரன்கள் எடுத்தார். 24.5 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் அறிமுக வேக, சுழற்பந்துவீச்சாளர்களாக களமிறங்கிய குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அர்ஷதீப் சிங், நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட தொடங்கியது. 2வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக கில் 84 ரன் எடுத்து அசத்தினார்.

Related Stories: